Thursday, April 21, 2011

கனவு10:அயல்நாட்டில் அம்மா!!!


தூரத்தில் இருந்தும்
மனதோடு கூடவே
வருகிறாய்.
தொடும் போது மட்டும்
நிழலாய்!தாய்!!!!!

Tuesday, April 12, 2011

கனவு 9:நீயில்லாமல் தனிமை



நிலவு இல்லாத நாளும்
ஒளி இல்லாத வீடும்
எனக்காகவே ஒதுக்கப்பட்டவையோ!!!
நீயில்லாததாலோ....!!!!
மௌவுனத்தில் மட்டும்
ஏனோ வெளிச்சம்
மனசுக்குள் நீ
இருப்பதாலோ...!!!!

கனவு 8: வளருகிறேன்



வளருகிறேன்....!
வளர்பிறை போல.
சிரிக்கிறேன்...
படி தொட்ட கையினால்
அடி மனசில் ஏற்பட்ட
சந்தோசத்தால்..!

கனவு 7: இவன் ஏன் இப்படி?


புத்தகம் நடுவே கவிதை.
மயிலிறகு சேமிக்கபட்ட இடமும்
மனசு முழுதும் நிறம்பிய
உன் பெயரும்தான்.

கனவு 6: தனிமை...



குழம்பிய மனசும்
குழப்பப்பட்ட சூழ்நிலையும்
கலந்த கலவையில்
நிறங்கள் மாறிய
இருண்ட தேசம்..தனிமை..!
கண்ணீர் துளிகளின் ஓசை
மெலோடியஸ் இசைக் கச்சேரி.
சோகங்கள் அதில்
மெல்லிய நடனம்.
சிந்தனைகள் மட்டும்
நடை பயணம்.....!
வாழ்வது கடினம்
வாழ்ந்து விட்டால்
நீ வீழ்வதும் மிகக் கடினம்...!

கனவு 5: பாரதி....


உனது கவிகளில்
உயிரோட்டம் உண்டு.
உயிர்கள் போதவில்லை
இவ்வுலகில்
அவையெல்லாம்
உண்மையாக்க.......!

Monday, April 11, 2011

கனவு 4: அன்பு....



அறியா வயசில்
நம்பிக்கையில்லை.
மனிதர்களும் தெய்வமா என்று.
அறிந்த வயசில்
மறைந்த இந்த அன்பு இதயத்துக்காக
மகனாய் தொண்டு செய்ய......!

கனவு 3:வரிசையாய்.....


சின்ன சின்ன உயிர்களின்
செயல்கள்
சிந்திக்க வைக்கும்
சில சமயங்களில்...!
எறும்புகள் சொல்லிக்கொடுத்த
பாடம்.இங்கேயும்.

கனவு 2:அரவணைப்பு



அழுத முகத்தில்
அன்பின் ஆழம்.
அரவணைத்து
அன்னை கொடுத்த
ஆதரவான முத்தத்தால்....