Friday, July 22, 2011

கனவு15: மழைத்துளிகள்...


சேர்க்கப்படாத வெள்ளைப்பூக்கள்
இங்கே சிதரிக்கிடக்கின்றன.
மரஞ்செடிகளில் தங்கிய
மழைத்துளிகள்.


பாதங்கள் பட்டு
உடைந்து போகிறது.
தெருக்களில் தங்கிய
மழைத்துளிகள்.


மேனி முழுவதும்
சிலிர்த்துவிடுகிறது...
மெல்லிய காற்றோடு..!
கைகளில் தங்கிய
மழைத்துளினால்...
இவ்வளவும் எப்போதாவது
நடப்பதுண்டு.
வானத்தின் பிடியில்
இருப்பதனால்.Monday, July 11, 2011

கனவு14:உதவும் கரங்கள்!!!


கரையேற்றிவிடும்
கைகளுக்கு தெரியாது.

நட்புக்கு மட்டுமே
தெரியும்..!!

"உதவி”

Friday, July 8, 2011

கனவு13:உனக்காவது தெரியுமா??


உன்னை புகழ்ந்து
எழுதிய கவியினால்
கைவிரல்கள் ஏதோ
சொல்லத் தவிக்கிறது..!
இடமாறிய இதயம்
இதுதான் என்று சொல்லியிருக்குமோ?
   
       ”பொய் பேச தெரியாத
       உன் கண்களுக்கு
       கைகள் மட்டும்
       எப்படி கவி எழுதவருகிறது?“


விடை தேடி
விண்ணில் பறந்தும்
தெரியவில்லையே என்பது மட்டும்
தெளிவாய் சொல்கிறது...!
உனக்காவது தெரியுமா எப்படினு??

Tuesday, July 5, 2011

கனவு12:வானம் பூமியிடம்!!நிஜமாய் சொல்கிறேன்.
நீயில்லாமல் 
நான் இல்லை...!!

Tuesday, May 31, 2011

கனவு 11:ஓவிய கவிதை
புறாக்களுக்கு தெரியாது போல
நீ ஓவியம் என்று!
கவிதை என்று படித்து
கொண்டிருக்கிறது!!!

Thursday, April 21, 2011

கனவு10:அயல்நாட்டில் அம்மா!!!


தூரத்தில் இருந்தும்
மனதோடு கூடவே
வருகிறாய்.
தொடும் போது மட்டும்
நிழலாய்!தாய்!!!!!

Tuesday, April 12, 2011

கனவு 9:நீயில்லாமல் தனிமைநிலவு இல்லாத நாளும்
ஒளி இல்லாத வீடும்
எனக்காகவே ஒதுக்கப்பட்டவையோ!!!
நீயில்லாததாலோ....!!!!
மௌவுனத்தில் மட்டும்
ஏனோ வெளிச்சம்
மனசுக்குள் நீ
இருப்பதாலோ...!!!!

கனவு 8: வளருகிறேன்வளருகிறேன்....!
வளர்பிறை போல.
சிரிக்கிறேன்...
படி தொட்ட கையினால்
அடி மனசில் ஏற்பட்ட
சந்தோசத்தால்..!

கனவு 7: இவன் ஏன் இப்படி?


புத்தகம் நடுவே கவிதை.
மயிலிறகு சேமிக்கபட்ட இடமும்
மனசு முழுதும் நிறம்பிய
உன் பெயரும்தான்.

கனவு 6: தனிமை...குழம்பிய மனசும்
குழப்பப்பட்ட சூழ்நிலையும்
கலந்த கலவையில்
நிறங்கள் மாறிய
இருண்ட தேசம்..தனிமை..!
கண்ணீர் துளிகளின் ஓசை
மெலோடியஸ் இசைக் கச்சேரி.
சோகங்கள் அதில்
மெல்லிய நடனம்.
சிந்தனைகள் மட்டும்
நடை பயணம்.....!
வாழ்வது கடினம்
வாழ்ந்து விட்டால்
நீ வீழ்வதும் மிகக் கடினம்...!

கனவு 5: பாரதி....


உனது கவிகளில்
உயிரோட்டம் உண்டு.
உயிர்கள் போதவில்லை
இவ்வுலகில்
அவையெல்லாம்
உண்மையாக்க.......!

Monday, April 11, 2011

கனவு 4: அன்பு....அறியா வயசில்
நம்பிக்கையில்லை.
மனிதர்களும் தெய்வமா என்று.
அறிந்த வயசில்
மறைந்த இந்த அன்பு இதயத்துக்காக
மகனாய் தொண்டு செய்ய......!

கனவு 3:வரிசையாய்.....


சின்ன சின்ன உயிர்களின்
செயல்கள்
சிந்திக்க வைக்கும்
சில சமயங்களில்...!
எறும்புகள் சொல்லிக்கொடுத்த
பாடம்.இங்கேயும்.

கனவு 2:அரவணைப்புஅழுத முகத்தில்
அன்பின் ஆழம்.
அரவணைத்து
அன்னை கொடுத்த
ஆதரவான முத்தத்தால்....

Thursday, March 31, 2011

கனவு 1: விலைவாசி உயர்வுஅரை டம்ளர் காபிக்கு
அறுபது பைசா அன்று.
பால் ஆடை விழுந்த காபிக்கு
பைசா கொஞ்சம் அதிகம் இன்று.
-தங்கம்
காலம் பதில் சொன்னது
உன் குழந்தைக்கு
என் பெயர் வைத்துவிடு!
இல்லையெனில் நீ என்னை
அருகினில் கூட பார்க்க முடியாது என்று..
இனிவரும் காலங்களில்..
-பால்
உன் வருகைக்காக
உலகில் எத்தனை
உயிர்கள் ஏக்கம்
ஒவ்வொரு காலையிலும் மாலையிலும்.
உன் விலை அதிகரிப்பால்
பச்சிளம் குழந்தைகளின்
பசி அடங்க பல மணிநேரம்.
பச்சத் தண்ணி கொடுத்தும்
பாட்டு பாடியும்
கண் உறக்கம் இல்லாமல்
கண்ணீர் துளிகள்தான் மிச்சம்
குழந்தையை கையேந்தும் தாய்க்கு...
அத்தனையும் உயர்ந்துவிட்டது
இத்தனை வருடம் ஆகியும்
உயராதது ஒவ்வொரு ஏழைதான்....
ஏன் இந்த அவலம்
என்று தணியும் இந்த கேவலம்...!!!

Friday, March 4, 2011

கொஞ்ச நேர கனவு


உன் முகம் வரைய
மூன்று புள்ளி போதும்
ஆயுத எழுத்தாய்
பார்த்து
அழகாய் வரைந்திடுவேன்..
என்னை நினைத்து
வெளிவரும்
வௌ்ளை பருக்களுக்கு
தெரியுமா...
எனது வெளிச்சம்..!
நகங்கள் சேகரித்து
வைத்திருக்கேன்
உன் நானத்தை
சேகரிக்க முடியாதவனாய்...
ஏழு அதிசயமும் யாபகம் வந்தாலும்
அழகாய் தெரிவதில்லை
நீ எதிரே வரும்போதெல்லாம்
அதிசயம்...
பகலில் சூரியன் தெரிவதில்லை
நிலவு முகம் காட்டும்
உன் கரு வெள்ளை கண்கள்
வெளிச்சத்தின்
முன்னால்...